Tuesday, August 25, 2009
அவளை போல் காற்றும்
தேவதைகள் வாழ்ந்த வீடாம்காற்று சொல்லி போனது அதன் வாசமும் உன் அருகாமையை அழைத்து வந்தது நீ உதறிபோன சிரிப்பின் ஒலியும் சிதறிகிடந்ததுஅள்ளமுடியாது தெரியும் எல்லாம் உன் சாயல் சுவாசிக்கிறேன் காற்றை மீன் முள்ளாய் இதயத்தில் சிக்குகிறாய்சூன்யாமான பிரதேசத்தின் அமைதியோடுகாற்றிடம்பேசிகொண்டு இருந்தேன்எங்கே அவள் என்றேன் நான்கு திசைகளிலும் அவளை பார்த்தாய் பிதற்றியது நான் பைத்தியக்காரன் என்று அவளிடம் அதுவும் தெரிந்திருக்க வேண்டும் காற்றும் வேண்டாம் அவளும் வேண்டாம் என அறையின் கதவை சாத்துகிறேன் எப்படியோ நுழைந்தும் படர்ந்தும் விடுகிறது அவளை போல் காற்றும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment