Tuesday, August 25, 2009

தேவதை வீதியில்

உன் மந்தகாசபுன்னகையாய் விழுந்தது இன்று மழை கொஞ்சம் கொஞ்சமாக இதயம் நனைத்தது மழையில் நனைந்த ஈரக்காலங்கள் தான் எத்தனை அழகுஎன்னை போன்று மழையை சாளரங்கள் வழியே ரசிப்பவள் இல்லை நீ நீ மழையோடு விழுந்து சில சமயம் மழையாய் விழுந்து உன் ரகசியம் தெரிந்துகொண்ட மழை இன்னும் அதிகமாகி உன்னை நனைத்து என்னை ஈரமாக்கிநீ மழையாகி மழை நீயாகிஓடி திரிந்தது அது ஒரு மழைகாலம் அந்த ஈர நாட்களில் நம் சந்திப்பு குறித்த நினைவுகள் இன்னும் மழையை பொழிவது உண்டு இந்த ஈரங்கள் காய நாட்களாகலாம் யாரிடம் சொல்லஎன் தேவதை வீதியில் அவளை போல் மழை வரைந்த ஓவியங்களை பார்க்க வரும் சாக்கில்இன்னும் எனக்குள் சொட்டிகொண்டுஇருக்கும் உன் நினைவுகளை போல்மழை துளிகளை கைகளில் ஏந்தி கொண்டுஉன் வீட்டின் பவளமல்லி செடியின் நடுவே நீ நின்று சிரித்ததுஇன்னுமிருக்கிறது ஈரமாக இதயத்தில்இப்படி எல்லாம் உன் நினைவுகளை கிறுக்குவதை தவிர வேற ஆறுதல் இருப்பதாக தோன்றவில்லையடி

No comments:

Post a Comment