Tuesday, August 25, 2009

நீ

இரவின் தனிமையில்மூடிய இமைகளையும் தாண்டிகன்னங்களிள் உறைந்து போகும்உன் நினைவு துளிகள்என்ன செய்துக்கொண்டிருப்பாய் சிந்திப்பதிலேயேவிடிந்து விடுகிறது என் எல்லா இரவுகளூம்இனி நினைக்கவே கூடாது என்ற தீர்மானத்துடன்பக்கமே நின்றாலும் யாதர்த்தமாய் உன் குரல்கேட்கும் போது என்னையும் மீறிஉன்னை செல்லமாய் கொஞ்ச உதடுவரைஒடிவரும் வார்த்தைகளைமரண அவஸ்தையோடுதிருப்பி அனுப்பும் போதுவலி தாங்காமல் கதறிஅழும் இந்த கோழை மனதின்சத்தங்கள் உனக்கு கேட்காமலேயேபோய்விடுகிறது.....

அவளை போல் காற்றும்

தேவதைகள் வாழ்ந்த வீடாம்காற்று சொல்லி போனது அதன் வாசமும் உன் அருகாமையை அழைத்து வந்தது நீ உதறிபோன சிரிப்பின் ஒலியும் சிதறிகிடந்ததுஅள்ளமுடியாது தெரியும் எல்லாம் உன் சாயல் சுவாசிக்கிறேன் காற்றை மீன் முள்ளாய் இதயத்தில் சிக்குகிறாய்சூன்யாமான பிரதேசத்தின் அமைதியோடுகாற்றிடம்பேசிகொண்டு இருந்தேன்எங்கே அவள் என்றேன் நான்கு திசைகளிலும் அவளை பார்த்தாய் பிதற்றியது நான் பைத்தியக்காரன் என்று அவளிடம் அதுவும் தெரிந்திருக்க வேண்டும் காற்றும் வேண்டாம் அவளும் வேண்டாம் என அறையின் கதவை சாத்துகிறேன் எப்படியோ நுழைந்தும் படர்ந்தும் விடுகிறது அவளை போல் காற்றும்

தேவதை வீதியில்

உன் மந்தகாசபுன்னகையாய் விழுந்தது இன்று மழை கொஞ்சம் கொஞ்சமாக இதயம் நனைத்தது மழையில் நனைந்த ஈரக்காலங்கள் தான் எத்தனை அழகுஎன்னை போன்று மழையை சாளரங்கள் வழியே ரசிப்பவள் இல்லை நீ நீ மழையோடு விழுந்து சில சமயம் மழையாய் விழுந்து உன் ரகசியம் தெரிந்துகொண்ட மழை இன்னும் அதிகமாகி உன்னை நனைத்து என்னை ஈரமாக்கிநீ மழையாகி மழை நீயாகிஓடி திரிந்தது அது ஒரு மழைகாலம் அந்த ஈர நாட்களில் நம் சந்திப்பு குறித்த நினைவுகள் இன்னும் மழையை பொழிவது உண்டு இந்த ஈரங்கள் காய நாட்களாகலாம் யாரிடம் சொல்லஎன் தேவதை வீதியில் அவளை போல் மழை வரைந்த ஓவியங்களை பார்க்க வரும் சாக்கில்இன்னும் எனக்குள் சொட்டிகொண்டுஇருக்கும் உன் நினைவுகளை போல்மழை துளிகளை கைகளில் ஏந்தி கொண்டுஉன் வீட்டின் பவளமல்லி செடியின் நடுவே நீ நின்று சிரித்ததுஇன்னுமிருக்கிறது ஈரமாக இதயத்தில்இப்படி எல்லாம் உன் நினைவுகளை கிறுக்குவதை தவிர வேற ஆறுதல் இருப்பதாக தோன்றவில்லையடி